- Details
- 223views

மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் தற்காலியமாக இடை நிறுத்தியுள்ளதாக மாநகர ஆணையாளர் எம்.தயாபரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பொதுசுகாதார பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தொடர்ச்சியாக பி சி ஆர் , மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- Details
- 221views

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் பால் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் சேதனப்பசளை ஊக்குவிப்பு தொடர்பான செயலமர்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலமர்வுகள் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் நிலையில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் 07.08.2021 அன்று நடைபெற்ற குறித்த செயலமர்வில் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜகம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
- Details
- 180views
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 1 வகுப்புடைய அலுவலகர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டலில் இருந்து விடுவிப்பதற்கான பாடநெறிப் பயிற்சி செயலமர்வு 02.08.2021 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
- Details
- 350views

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியை சேர்ந்த திரு சிங்கநாயகம் குலதீபன் அவர்கள் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிதி) பதவிக்கான நியமனத்தினை கிழக்கு மாகாண கௌரவ ஆளுனரிடமிருந்து அண்மையில் பெற்று தனது கடமைகளை கடந்த 02/08/2021ம் திகதி ஆரம்பித்துள்ளார்.
- Details
- 288views

மட்டக்களப்பு மாவட்டத்தை மீண்டும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ள கொவிட் 19 வைரசின் மூன்றாது அலையிலிருந்து எமது மக்களை பாதுகாத்து, கொவிட் 19 தொற்றுப் பரவலை மாவட்டத்திற்குள் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறுபட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டம் பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்ட கொவிட் 19 தடுப்புச் செயலணியானது மாவட்டம் பூராகவும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபரும், மட்டக்களப்பு மாவட்ட கொவிட் 19 செயலணியின் தலைவருமாகிய திரு கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சுகாதாரத் துறையினரின் பாரிய பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.





