DSC 0381 resized

பெரும்போக நெல் அறுவடையினை அரசினால் கொள்வனவு செய்யும் நடவடிக்கை நாடுபூராகவும் விவசாய இராஜாங்க அமைச்சு மற்றும் நிதி அமைச்சினூடாக இடம்பெற்றுவரும் அதேவேளை இம்மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல் கொள்வனவினை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

DSC 0335 resized

மட்டக்களப்பில் ஆடைக் கைத்தொழில் பூங்கா அமைப்பதற்காக செங்கலடி புண்ணக்குடா பகுதியில் 200 ஏக்கர் காணி இலங்கை முதலீட்டாளர் சபைக்கு கையளிக்கும் நிகழ்வு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கே. கருணாகரன் அவர்களின் தலைமையில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் 09.02.2021 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

DSC 0313 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேல்ட் விசன் சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் இவ்வாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு கே. கருணாகரன் அவர்கள் தலைமையில் 09.02.2021 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

DSC 0328 resized

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 10 அம்ச கொள்கைகள் அடங்கிய தேசிய கொள்கைகள் சட்ட திட்டத்திற்கு அமைவாக சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் கீழ் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டினூடாக துடிப்பான தேசத்தை உருவாக்குவது தொடர்பான செயலமர்வு 09.02.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

DSC 0301 resized

சட்டவிரோதமான முறையில் முறையற்ற வெளிநாட்டுப் பயணத்தினை தவிர்ப்பதற்கான விழிப்பூட்டல்களை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 09.02.2021 அன்று  இடம்பெற்றது.