DSC 0026 resized

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஆலோசணைக்கு  அமைவாக 25 மாவட்டங்களின் கொரோனா நடவடிக்கைக்கு பொறுப்பாக இராணுவ அதிகாரிகளை நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் மட்டக்களப்பிற்கு மேஜர் ஜெனரல் சீ.டீ.ரணசிங்க நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா செயலணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சீ.டீ.ரணசிங்க கடந்தவாரம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

DSC 0898 resized

மட்டக்களப்பு வாவியினை அபிவிருத்தி செய்வதனூடாக இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன் விவசாயம், மீன்பிடி உட்பட சுற்றுலாத் துறையினையும் மேம்படுத்தி மாவட்டத்தினதும் மாவட்ட மக்களினதும் பொருளாதாரத்தினை அதிகரிக்கச் செய்ய புதிய திட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

DSC 0588 resized

மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் முதலைக்குடா மகிழடித்தீவு ஆகிய பிரதேசங்களில் இறால் மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை அமுல்படுத்துவதற்கேற்ற காணிகளாக இனங்காணப்பட்ட 381 ஏக்கர் அரச காணியில் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையினைப் (ஈ.ஐ.ஏ) பெற்றுக் கொள்ள அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

DSC 08770 resized

மட்டக்களப்பில் சிறுவர் தினத்தை முன்னிட்டு ஆரம்பக் கல்வியைத் தொடரவிருக்கும் வசதியற்ற மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் 23.11.2020 அன்று இடம்பெற்றது.

Sirajdeen resized

மட்டக்களப்பில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான மானிய உர விநியோகம் கிரமமாக இடம்பெற்று வருகின்றது. இம்முறை பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டுள்ள விவசாய நிலங்களில் 60 ஆயிரத்தி 87.5 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான 16 ஆயிரத்தி 878 மெற்றிக் தொன் மானிய உரம் 20 ஆயிரத்தி 975 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் திரு.கே.எல்.எம். சிராஜுதீன் அவர்கள் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.