- Details
- 406views

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர (மட்டம் - 2) உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 3 மாத கால இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- Details
- 340views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வரும் 14 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் உரிய சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம் 29.01.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 383views

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவின் காயன்குடா கிராம சேவகர் பிரிவிலே அடிப்படை வசதிகள் அற்று வறுமை கோட்டில் வாழ்கின்ற 04 குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கையளிக்கும் நிகழ்வு 28.01.2021 அன்று நடைபெற்றது.
- Details
- 411views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு க.கருணாகரன் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவானது மிகவும் எளிமையான முறையில் கொரோனா தொற்றுக்காரணமாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து மாவட்ட செயலக ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு ஐகதீசக்குருக்களினால் அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது.
- Details
- 344views
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டதாரிகள் பெப்ரவரி முதலாந்திகதி முதல் பட்டதாரி பயிலுனர்களாக புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கே. கருணாகரன் அவர்கள் தெரிவித்தார்.





