DSC 0233 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற பருவகால மழை காரணமாக வெள்ளநீர் தேங்கியுள்ள நிலைமையில் விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட 3212 ஏக்கர் தற்போது நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாவட்டத்தின் விவசாய மக்கள் முகத்துவார ஆற்றுவாயினை வெட்டி நீரினை வெளியேற்றுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

DSC 0271 resized

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பு மையம் மாவட்ட செயலகத்தில் 09.11.2020 அன்று உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது மாவட்ட மக்களுக்கான தேவையினை 24 மணித்தியாலமும் வழங்கும் நிலையமாக செயற்படும்.

DSC 0125 resized

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் வாழைச்சேனை ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான க.கருணாகரன் அவர்களின் முயற்சியின் பேரில் அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் 06.11.2020 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

DSC 0139 resized

அரச தரப்பினால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் ஒத்துழைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலை மட்டக்களப்பில் கட்டுப்படுத்த முடியாது என மாவட் செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் அவர்கள் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் 4 வது விசேட கூட்டம் 06.11.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

DSC 0077 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர், அவ்வேளைகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகின்ற வெளிநோயாளர்கள் தரித்திருப்பதற்கான தற்காலிக கூடாரங்களை மேலும் அதிகரித்துக்கொள்ளவேண்டிய தேவையுள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களிடம் வைத்தியசாலை நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.