WhatsApp Image 2022 02 23 at 16.36.22சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது மற்றும் சின்னஞ்சூட்டும் நிகழ்வானது ஜனாதிபதி தலைமையில் 23/02/2022 அன்று திகதி இடம்பெற்றது.இன்றைய தினம் ஜனாதிபதி விருதினை பெற தகுதியுடைய நாடு பூராகவும் உள்ள அனைத்து சாரணர்களையும் ஒரே இடத்திற்கு அழைக்க முடியாத கொவிட் சூழ்நிலையினை கருத்திற் கொண்டு ஜனாதிபதி விருதினை வழங்கி வைக்கும் குறித்த நிகழ்வானது நிகழ்நிலை (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து சாரணர்களையும் ஒருமித்து இடம்பெற்றிருந்தது.

WhatsApp Image 2022 02 22 at 16.26.27

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக்கூட்டம் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.கே.கருணாகரன் அவர்களது தலைமையில்  22.02.2022 திகதி அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய குழுக்கூட்டமானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.

DSC 0148 1 resized

பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை மாவட்டங்களுக்கு மஞ்சள், இஞ்சி மற்றும் ஆடு வளர்ப்புத் திட்டங்கள் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

WhatsApp Image 2022 02 22 at 14.04.59

கிழக்கு மாகாணத்தில் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக சேதனப்பசளை விவசாயத்தை ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும் என கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

IMG 4344 resized

கலாசார அலுவல்கள் அமைச்சின், கலாசார மத்திய நிலையங்கள் செங்கலடி மற்றும் வாகரை பிரதேசங்களில் எதிர் வரும் 02.03.2022 திகதி கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரின் பங்கு பற்றுதலுடன் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான முன்னாயத்த ஏற்பாட்டு நடவடிக்கைகள் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.கருணாகரன் அவர்கள்  தலைமையில் மாவட்ட செயலகத்தில் 16.02.2022 அன்று  நடைபெற்றது.