01 15 resized

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை நுழைவாயில் பாதை காபட் இட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களின்  வேண்டுகோளுக்கு இணங்க வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் திரு.கே. சிவகுமார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இப்பாதையினை காபட் இட்டு செப்பனிட பணிப்புரை விடுத்திருந்தார். இதற்கமைவாக இப்பாதை காபட் இடப்பட்டு செப்பனிடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 02 05 at 14.37.16

மட்டக்களப்பு கல்குடா கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் புதிய தொழிநுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 05.02.2022 அன்று  கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திரு தினகரன் ரவி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

IMG 3123 resized

சுதந்திரக் கிண்ண உதைப்பந்தாட்ட சிலோன் மாகாண லீக் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பெப்ரவரி 2ஆந் திகதி  ஆரம்பித்து வைக்கப்பட்டன.

IMG 3268 resized

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74 வது சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. கே. கருணாகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

IMG 2977 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத் ஆகியோரின் இணைத்தலைமைத்துவத்தில் 01/02/2022 அன்று  மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.