WhatsApp Image 2022 02 15 at 12.40.20 1

மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளராக திருமதி.இந்திராவதி மோகன் அவர்கள் கடந்த 11.02.2022 திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது அரச சேவையை 1989 ஆண்டு அமைய நிதி உதவியாளராக வவுனியா பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனையில்   கடமைகளை ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனையில் அமைய நிதி உதவியாளராக  கடமையாற்றியுள்ளார்.

4 5 resized

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்டுவரும் அரசகரும மொழித் தேர்ச்சிக்கான சிங்கள மொழியினைப் பயிற்றுவிக்கும் பயிற்சிப்பட்டறை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் 14.02.2022 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

IMG 3777 resized

மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான கொவிட் 19 பூஸ்டர் தடுப்பூசி 10/02/2022 அன்று இராணுவத்தினரால் ஏற்றப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரச உத்தியோகத்தர்களுக்காக மாவட்ட செயலகத்தில் ஏற்றப்பட்டிருந்தது.

273810941 248630990766898 3407921217627382016 n resized

75 ஆவது சுதந்திர தின பவள விழா நிகழ்வை முன்னிட்டு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாடுபூராகவும் 75 இலட்சம் மரங்களை நடும் தேசிய  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

IMG 3503 resized

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம் கிரமமாக இடம்பெற்று வருகின்றது. நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலையில் டெங்கு பரவலும் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.