மட்டக்களப்பில் ஒமிக்ரோன் பரவல் அதிகரிப்பு அதனைக் கட்டுப்படுத்த கொவிட் தடுப்பு செயலணி துரித நடவடிக்கை
- Details
- 77views

மட்டக்ளப்பில் ஒமிக்ரோன் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி துரித நடவடிக்கை எடுத்துவருகின்றது.இதற்கமைவாக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் 27.01.2022 அன்று மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. க. கருணாகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 81views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கருணாகரன் அவர்கள் தலைமையில் "சுத்தமான சூழல் ஆரோக்கியமான நாளை" வேலைத்திட்டம் மாவட்ட செயலகத்தில் 28.01.2022 அன்று இடம்பெற்றது."சுத்தமான சூழல் ஆரோக்கியமான நாளை" எனும் தலைப்பில் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.செயலாளர் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.
- Details
- 69views

கலாசர அலுவல்கள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நெனசர வாசிகசாலை வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பிலுள்ள 14 வாசிகசாலைகளுக்கு புத்தகப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் அவர்கள் தலைமையில் 25.01.2022 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 69views

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2147 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- Details
- 66views

மட்டக்களப்பு மாவட்டத்தில் பேரிடர்கள் எற்படும் போது பொது மக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னாயத்தம் தொடர்பாக ஆராயும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.கருணாகரன் அவர்கள் தலைமையில் 21.01.2022 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.





