1 

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட இலக்கிய  விழா போட்டித் தொடரில் வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 03/03/2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

1

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடணத்திற்கு அமைவாக போதையற்ற நாடு - சௌபாக்கியமான தேசம் எனும் மகுட வாசகத்திற்கு ஏற்ப போதையற்ற தேகாரோக்கியமான, உள சுகாதாரமான நீங்களே சிறந்த மனிதன் எனும் தொனிப் பொருளிற்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றது. 

WhatsApp Image 2022 03 02 at 14.23.23

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்பபடுத்தப்பட்டுவரும் "கம சம கபி விசந்தரக்" கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 02/03/2022 அன்று  புதன்கிழமை இடம்பெற்றது.

WhatsApp Image 2022 03 02 at 19.30.21  

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழக நடன, நாடகத்துறை மற்றும் இந்துமா மன்றம் இணைந்து சிவராத்திரியை முன்னிட்டு பெருமையுடன் வழங்கிய “ஈஸ்வரா நாட்டியாஞ்சலி 2022" நிகழ்வானது, 01/03/2022 அன்று  செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக இராசதுரை அரங்கில் நடைபெற்றது.

WhatsApp Image 2022 03 02 at 15.27.35

சமூக சேவை உத்தியோகத்தர்கள், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முதியோர் அபிவிருத்தி  உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த மீளாய்வு கூட்டமும் மனித நேயம் மற்றும் உள்ளடக்கம் என்ற அமைப்பினால்  நடாத்தப்பட்ட விழிப்புணர்வு  நிகழ்வும்  02/03/2022 அன்று  மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா  மண்டபத்தில்  இடம் பெற்றது.