DSC 0530 resizedசுனாமி பேரலையினால் உயிர்நீத்த மக்களை நினைவு கூரும் முகமாக 26.12.2019 அன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

DSC 0604 resizedபால்நிலை சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு 26.12.2019 அன்று அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

DSC 0079 resized மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு ஏ.சி.எம்.சியாத்  மற்றும் தேசிய அனர்த்த நிவாரண நிலை உத்தியோகத்தர்கள் சகிதம் வெள்ள அனர்த்த நிலைகளை கண்காணிப்பதற்காக கரவெட்டியாறு, கரடியனாறு, ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற பகுதிகளை பார்வையிட்டனர்.

DSC 0280 resizedகிழக்கு மாகாண ஆளுநர் திருமதி.அனுராதா ஜகம்பத் 25.12.2019 அன்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீரற்ற காலநிலையால் இம்மாவட்டத்தில் வெள்ளஅனர்த்தத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கைகள் பற்றியும் கண்டறிந்ததுடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந்தார்.

DSC 0210 resizedமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எஸ்.வியாழேந்திரன் அவர்கள் அவசரமான கூட்டத்தினை இன்று  24.12.2019 காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்களுடன் இணைந்து மாவட்ட அனர்த்த  நிலைமைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.