மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த டிசம்பர் 06 ஆந் திகதி தொடக்கம்  டிசம்பர் 13 ஆந் திகதி வரையும் 128  பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதியில் இருந்து இதுவரை 1879 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு  மாவட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் 17.12.2019 அன்று  இழப்பிட்டிற்கான அலுவலக அதிகாரிகள் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று காலை 9.30 மணியளவில் டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

DSC 0581 resized

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணிபுரிகின்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிற்றூளியர்களுக்கு இன்று உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் விழுமியங்களையும், தொன்மைகளையும், கலாசார பண்புகள் மற்றும் மட்டக்களப்பிற்கே உரித்தான கலைகள் அவற்றின்பாலெழுந்த படைப்புக்களையும் முழு உலகிற்கு அறியச் செய்வதற்கான அர்த்தமிகு நிகழ்வாக 2019 ஆம் வருடத்திற்கான மாவட்ட இலக்கிய விழா  மாவட்ட கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு   மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்கள் தலைமையில் 17.12.2019 செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது அபிவிருத்தி இணைப்பு குழு கூட்டம் 16/12/2019 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.