மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததினால் இதுவரை 42 வீடுகள் பகுதியளவிலும் ஒரு வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளது. இச்சேத விபரங்களை அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையிலான அதிகாரிகள் குழு வெள்ள அனர்த்தத்தை பார்வையிடுவதற்காக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் திரு.ஏ.சி.எம்.சியாத் அவர்களுடன் வேற்றுச்சேனை கிராம சேவகர் பிரிவினை விசேடமாக பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வருகின்ற தொடர் மழையினால் 8 பிரதேச செயலகங்களில் 18 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசாங்கத்தினால் தற்போது மண் அனுமதி பத்திரம் தளர்த்தப்பட்ட நிலையில் ஆறுகள், குளங்கள், வீதியோரங்கள் மற்றும் மணல்பாங்கான பிரதேசங்களில் மக்கள் முந்தியடித்துக் கொண்டு  மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதை 09.12.2019 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆரையம்பதி பிரதேசப்பிரிவிற்கு உட்பட்ட செல்வா நகர் கிராம மக்களுக்கு கூரைப்படங்குகள் 09.12.2019 அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களால் ஒரு தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.