- Details
- 862views

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதுறு ஆறு பெருக்கெடுத்ததையடுத்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் தேசிய அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர் மீட்புப்பணிக்காக சென்று கொண்டிருந்த போது மாவடியோடை பாலத்தை நீர் பெருக்கெடுத்ததையடுத்து இயந்திரப்படகினை உழவு இயந்திரம் மூலமாக ஏற்றி சென்ற வேளையில் குறித்த மாவடியோடை ஊடாக பெருக்கெடுத்த நீரில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து அதில் பயணம் செய்த தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர் நீரில் முழ்கி அதிஸ்டவசமாக காப்பாற்றப்பட்டார்.
- Details
- 957views
மாதுறு ஒயா ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திலுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் முழ்கி இருப்பதுடன் முழ்கிய கிராமங்களில் சிக்குண்ட மக்களை அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடற்படை மற்றும் இராணுவப்படையினரின் ஒத்துழைப்புடன் விசேட உலங்கு வானூர்தி மற்றும் இயந்திரப்படகுகள் மூலம் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன்படி ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கித்துள் கிராமத்தில் 30 பேரும் மாவடியோடை பகுதியில் 33 பேரும் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளனர்.
- Details
- 1144views
லண்டன் ஹென்சோ இஸ்ரியு கராத்தே அக்கடமியினரால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர்களுக்கு அரசினால் எவ்விதமான நிவாரணப்பொருட்களும் வழங்கப்படாத நிலையில் உள்ளமையை அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தனது கவனத்தில் கொண்டு இவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென பற்றி நியூஸ் (Batti News) ஊடக ஸ்தாபகரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து இந்த ஸ்தாபகர் லண்டன் அக்கடமியிடம் இருந்து உதவியை பெற்று 150 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து மாவட்ட செயலகத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர் அனைவருக்கும் இந்த நிவாரண உதவியினை வழங்கிவைத்தமைக்கு லண்டன் அக்கடமி நிறுவனத்திற்கும் விசேடமாக ஆர்.சயநொளிபவனுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
- Details
- 1020views

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும் உள்ள வறுமை நிலைக்குட்பட்ட மாணவர்களை இணங்கண்டு அதில் 400 மாணவர்களுக்கு கியுமெடிக்கா லங்கா நிறுவனத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 21.12.2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 977views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 18.12.2019 மாலை 2.30 மணியளவில் ஒளி விழா நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.





