- Details
- 879views
தொடர்ச்சியாக பெய்துவருகின்ற அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலே இதுவரை 6696 குடும்பங்களைச் சேர்ந்த 22614 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 06.12.2019 முதல் 8 இடைத்தங்கல் முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.
- Details
- 784views
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப்பிரிவில் போக்குவரத்து தடைப்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் நேரில் சந்தித்து அங்குள்ள நிலைமையை கேட்டறிந்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கேட்டறிந்து உரிய அதிகாரிகளை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைப் பணித்தார்.
- Details
- 1117views
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் தினம் 05.12.2019 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் (ஒசானம்) நிலையம் சத்துருக்கொண்டானில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
- Details
- 751views
தற்போதய தொடர்மழை காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 10738 குடும்பங்களைச் சேர்ந்த 35756 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் (06.12.2019) பிற்பகல் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
- Details
- 885views
வெள்ள அனர்த்தினால் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு மாவட்ட மக்களை பார்வையிடுவதற்கான மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ எஸ்.வியாழேந்திரன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு.எ.எஸ்.எம் சியாத் மற்றும் பிரதேச செயலாளர்கள் வெள்ள அனர்த்தினால் பாதிப்புள்ளாகி இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை பார்வையிட்டிருந்தனர்.





