DSC 1043 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான வான்மைவிருத்தி பயிற்சிப்பட்டறை 23.12.2019 அன்று காலை 9.30 மணிக்கு  மாவட்ட  செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

DSC 0133 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகப்பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட முறுத்தானை கிராம சேவகர் பிரிவு மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் 23.12.2019 அன்று அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களினால் சந்திவெளி ஊடாக திகிலி வட்டைக்கு நீர் வழிப்பாதைக்கான இயந்திரத்தில் அனுப்பிவைக்கப்பட்டது.

DSC 0027 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அடைமழை மற்றும் நீர்தேக்கங்கள், குளங்கள் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் உன்னிச்சை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கரவெட்டியாறு கிராமத்தை சார்ந்த 58 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப்பொருட்களை 23.12.2019 அன்று அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் வழங்கி வைத்தார்.

DSC 0104 resizedஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் மூழ்கிய கொம்மாதுரை கிராமத்திற்குட்பட்ட தீவுப்பகுதியில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 15 குடும்பங்களுக்கான நிவாரணப்பொருட்களை கொம்மாதுரை அரசின் கலவன் பாடசாலையில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களினால் 23.12.2019 வழங்கி வைக்கப்பட்டது.

DSC 0961 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் கலையை வாழ வைக்கும் நோக்கில் கண்ணகி கலை இலக்கியக்கூடல் நடாத்தும் கண்ணகி கலை இலக்கிய தொடக்க விழா 22.12.2019 அன்று காலை 9.15 மணியளவில் கல்லடி துளசி மண்டபத்தில் பேராசிரியர் சே.யோகராசா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.