- Details
- 877views
மட்டக்களப்பு மாவட்டத்தின் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதை விவசாயிகள் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களிடம் முறையிட்டதை தொடர்ந்து 01.09.2018 பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைப் பார்வையிடுவதற்காக அனர்த்த நிவாரண நிலைய உதவிப்பணிப்பாளர் திரு.A.M.S சியாத் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண நிலைய உத்தியோகத்தர்கள் குழு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
- Details
- 889views
மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களின் வாக்களிப்பு 01.11.2019 பிற்பகல் 4.15 மணியுடன் முடிவடைந்து. அஞ்சல் வாக்களிப்பு நடைபெறும் போது எவ்விதமான அசம்பாவிதங்களும் இரண்டு தினங்களிலும் பதிவாகவில்லை என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்தார்.
- Details
- 936views
மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகாரசபையின் புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்யும் கூட்டம் கடந்த 30.10.2019 பி.ப 3.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், இஸ்லாமிய கலாசார உத்தியோகத்தர் திரு.செயினுஸ் ஆப்தின் மற்றும் கலாசார திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
- Details
- 971views
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 31.10.2019 மற்றும் 01.11.2019 தபால் மூலமான வாக்களிப்பு நடைபெற்றது. இக்கடமையில் 32 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமையில் ஈடுபட்டு 154 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் வாக்களித்தனர்.
- Details
- 1005views
ஜனாதிபதியின் விசேட செயற்திட்டத்தின் கீழ் "வனரோபா" காட்டுமரங்களை வளப்படுத்தல் செயற்திட்டமானது ஒக்டோபர் 1ம் திகதி தொடக்கம் 31ம் திகதி வரை தேசிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது தற்போது இலங்கையில் 17% வனப்பகுதிகளே காணப்பட்டு வருகின்றது. இதனை 32% ஆக காட்டு வளத்தினை அதிகரிப்பதற்கான இத்தேசிய திட்டத்தில் அரச, அரசசார்பற்ற அனைத்து திணைக்களங்களும் இதில் இணைந்து தற்போது செயற்பட்டுவருகின்றது.





