மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு இதுவரை 14 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 5 முறைப்பாடுகளும், ஏறாவூர் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில் 5 முறைப்பாடுகளும், காத்தான்குடி பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்து 2 முறைப்பாடுகளும், வெல்லாவெளி பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்து 2 முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவி தெரிவு அத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் பணியாற்றவுள்ள சிரேஸ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உதவித்தேர்தல் ஆணையாளர் திரு.ஆர்.சசீலன் தலைமையில் கடந்த 29.10.2019 காலை நடைபெற்றது. பயிற்சி வகுப்பானது ஆரம்ப கட்டமாக சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கு இரண்டு கட்டமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயரதிகாரிகளுக்கான தேசிய வேலைத்திட்டமான இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விழிப்புணர்வு கருத்தரங்கு 25.10.2019 காலை மு.ப 9.30 மணிக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக "டேபா" மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

கோரளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகத்தின் உலக சிறுவர் முதியோர் தின நிகழ்வு வாகரை கலாச்சார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.கரன் தலைமையில் 28.10.2019 அன்று காலை மு.ப 11 .00 மணியளவில் ஆரம்பமானது.

அரசியலமைப்பின் 104(ஆ)(4)(அ) உறுப்புரைக்கமைய "தேர்தல் காலத்தின்போது அரசாங்கத்திற்கு அல்லது ஏதேனுமொரு பகிரங்க கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஏதேனும் அசையும் அல்லது அசையா ஆதனம்" யாதேனுமோர் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு எவரேனும் வேட்பாளரை ஊக்கப்படுத்துகின்ற அல்லது தடுக்கின்ற நோக்கத்துக்காக யாதேனுமோர் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவினால் பயன்படுத்துவதைத் தடைசெய்வதற்கான தத்துவம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு.