மட்டக்களப்பு மாவட்டத்தின் போருக்கு முன்னரான நிலமையும் தற்போது காணப்படுகின்ற நிலமையினையும் அறிந்து கொள்வதற்காக "டோகா" பல்கலைகழக உயர் பட்டப்படிப்பினை மேற்கொள்கின்ற ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 16 பிரதி நிதிகள் கடந்த 20.10.2019 காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகைதந்திருந்தனர்.

பருவபெயர்ச்சி காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்ற நிவாரண முன்னாயத்த திட்டமிடல் மற்றும் சென்டாய் கட்டமைப்பினை செயற்படுத்துதல் தொடர்பான கூட்டம் 18-10-2019 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் கிழக்கு மாகாண மட்ட விருது வழங்கும் வைபவமானது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக "டேபா" மகாநாட்டு மண்டபத்தில் நேற்று 17.10.2019 காலை 11.00 மணிக்கு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் திருமதி.நில்மினி.க.கேரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட திட்டத்தின் கீழ் மகளீரை உதைப்பந்தாட்டத்துறையில் வளர்ச்சிகான செய்யும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு சபையின் வேண்டுகோளுக்கமைய புலம்பெயர்தோருக்கான சர்வதேச அமைப்பான ஜ.ஒ.எம் நிறுவனம் கனடா நாட்டு நிதி உதவியின் விசேட திட்டங்களை அமுல்படுத்த முன்வந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையை வளர்ச்சிகாணச்செய்ய மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்திசபை துரித நடவடிக்கை எடுத்துவருகின்றது. மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட விளையாட்டு அபிவிருத்திசபையின் தலைவருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் எடுத்துகொண்ட முயற்சியின் பயனாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.