- Details
- 730views
ஏப்ரல் 21 குண்டுவெடிப்பில் மட்டக்களப்பில் உளரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களை ஆற்றுப்படுத்தும் விசேட திட்டத்தின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் பரிந்துரைக்கமைய ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் உதவி திட்டத்தில் கற்றல் மற்றும் பொழுதுபோக்கு உபகரணங்கள் 16.09.2019 அன்று வழங்கிவைக்கப்பட்டன.
- Details
- 839views
எதிர்வரும் (18)ம் திகதி புதன்கிழமை கொழும்பு அலரி மாளிகையில் வழங்கப்படவுள்ள வெளிவாரி பட்டதாரி பயிலுனர் நியமனத்துக்கான அழைப்புக்கடிதம் கிடைக்காத மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் தத்தமது பிரதேச செயலகங்களுக்குச் சென்று உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று நியமனக்கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அறிவிக்கின்றார்.
- Details
- 693views
இலங்கை நிர்வாக சேவை சகல நிர்வாக உத்தியோகத்தர்களும் நேற்றும்(10.09.2019) இன்றும்(11.09.2019) சுகயீன விடுமுறை என அறிவித்து தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது என இலங்கை நிர்வாக சேவை சங்கத்தினர் தீர்மானித்து, இன்று 11ம் திகதி அனைத்து சேவை உத்தியோகத்தர்களும் பொது நிர்வாக அமைச்சின் முன்றலில் எதிர்ப்பு செயற்பாட்டில் இடுபடுகின்றனர்.
- Details
- 748views
மட்டு நகரில் 65 மில்லியன் ரூபாயில் அமைக்கப்பட்ட தனியார் பஸ் நிலையம் 12.09.2019 அன்று காலை 10.00 மணிக்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பெயரில் இந்த தனியார் பஸ்தரிப்பு நிலையம் சகல வசதிகளுடன் கூடியதாக இரண்டு மாடிகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
- Details
- 689views
இலங்கை நிர்வாக சேவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினரால் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட ஒன்று கூடலில் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் அவதூறான வார்த்தை பிரயோகங்கள் மூலமாக பரப்புரைகள் செய்து வந்தமைக்கு எதிராக கறுப்புபட்டி அணிந்து தங்களின் எதிர்ப்பினை காட்டும் நடவடிக்கையை 11.09.2019 புதன்கிழமை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர் அதனை எதிர்வரும் புதன்கிழமை (18.09.2019) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஊடக பிரிவுக்கு தெரிவித்தனர்.





