மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் ஆரம்ப உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இணைக்குழு தலைவரான ஆரம்பக்கைத்தொழில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கெளரவ அலிஸாகீர் மௌலானா அவர்கள், மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் கெளரவ ஞானமுத்து சிறிநேசன் அவர்கள் இருவரின் தலைமையில் நடைபெற்றது.

வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் உதவியினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள 30 பாடசாலைக்கான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முதல் கட்ட ஆய்வு அறிக்கையினை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களுடன் வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் திருமதி. தவராஜா தலைமையில் 11 மணியளவில் மாவட்ட செயலாளரின் கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.

அம்கோர் நிறுவனத்தினால் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் நிதி அனுசரனையில் கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் 2019 ஆண்டிற்கான புதிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 22.08.2019 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் யுத்த சூழலால் இடம் பெயர்ந்து தற்காலிகமாக குடியேறி மீளவும் சொந்த இடங்களில் குடியேறுகின்ற அனைவருக்கும் அவர்களுக்குரிய அத்தியாவசிய தேவைகளை இலகுவாக வழங்க வேண்டும் என்ற கொள்கை திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்திகரமாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட செயலகத்தில் கடந்த 19.08.2019 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட சுகாதார திணைக்களமும், பிரதேச சபையின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மற்றும் இது தொடர்பான அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.