ஜனாதிபதி செயலகமும் பாதுகாப்பு அமைச்சுடன் உள்ளக நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சும் இணைந்து செயல்படுத்தி வருகின்ற கிராம பாதுகாப்பு குழுக்கூட்டம் 15.08.2019 மட்டக்களப்பில் நடைபெற்றது.

மேற்படி மாவட்டத்தின் போசாக்கு செயற்பாட்டுத்திட்டம் தயாரித்தலுக்கான செயலமர்வுகள் எதிர்வரும் 15.08.2019 மற்றும் 16.08.2019 ஆகிய தினங்களில் காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் நடாத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற வறட்சியான சூழலை முகாமைத்துவம் செய்யும் இணைப்புக்குழுவின் விசேட கூட்டம் கடந்த 06.08.2019 செவ்வாய் கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரியும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், இளைப்பாறிய மற்றும் மரணித்த உத்தியோகத்தர்களின் குடும்பங்களும் ஓய்வூதிய நிதியை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகின்றது.

ஆரம்பக்கைத்தொழில் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டுதலின் பேரில் சமூக சேவைத்திணைக்களம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மதிப்பீடு செய்யும் இவ் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டு விழா மட்டகளப்பு வெபர் விளையாட்டுஅரங்கில் கடந்த 03.08.2019 சனிக்கிழமை வெகு விமர்சையாக இடம் பெற்றது.