இடம் -  மட்/சிவானந்தா விளையாட்டு மைதானம்

திகதி - 06.07.2019 சனிக்கிழமை

மட்டக்களப்பு  மாவட்ட செயலகம் ஏற்பாடு  செய்திருந்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் மாவட்ட நிகழ்வு மட்டக்களப்பு நகர காந்தி பூங்காவில் 02/07/2019 மாலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

அகில இலங்கை  ரீதியிலான 45வது கடற்கரை கபடி விளையாட்டுப் போட்டியில்  மட்டக்களப்பு  மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கோறளைப்பற்று  தெற்கு பிரதேச  செயலகத்தின் கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழகத்தின் வீராங்கனைகள் முதலாம் இடத்தினைப் பெற்று மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக்   கொடுத்தமை  குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2019 சிறுபோகத்து நெற்செய்கையில் அறுவடை செய்யப்படவுள்ள நெல்லை அரசாங்கதினால் கொள்வனவு செய்வதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

போதைப் பொருள் தடுப்பு வாரம் 23ம் திகதி ஜுன் முதல் 1ம் திகதி ஜுலை வரைக்கும் நாடு முழுவதுமாக நடத்துவதற்கான ஏற்பாட்டினை அரசு மேற்கொண்டு வருகின்றது அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு வாரத்தினைச்  சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான முன்னாயத்தங்களை அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கு அமைவாக 21.06.2019 மதியம் 2.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.