- Details
- 802views
தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு இந்து சமய அறநெறிகள் கல்வி கொடி தினம் கடந்த முதலாம் திகதி செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டதை முன்னிட்டு 09.09.2019 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களுக்கு கொடியினை அணிவித்து கொடிவாரத்தினை இந்து சமய கலாச்சார உத்தியோகத்தர் திரு.எஸ்.குணநாயகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- Details
- 721views
மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பற்று பிரதேச பெரும்போக பயிற்செய்கை ஆரம்ப கூட்டம் 09.09.2019 திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரீ.சுதர்சினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறிய நீர்ப்பாசன மானாவாரி கண்டங்களில் நெற்பயிற்செய்கை செய்வது தொடர்பாகவும் கால்நடைகளை வெளியேற்றுதல், உரமானியம், பயிர்காப்புறுதி மற்றும் வங்கிக்கடன்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
- Details
- 721views
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1ஆந் திகதி மற்றும் ஆகஸ்ட் 16 ஆந் திகதி நிலவிய அசாதாரண காலநிலையின் போது பலத்த சுழல் காற்றினால் 161 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்தது. இதற்கான நிவாரணப்பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உணரப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் பணிப்பின் பெயரில் தேசிய அனர்த்த நிவாரண நிலையத்திற்கூடாக 1.6 மில்லியன் நிதியினை உடனடியாக விடுவித்து இச்சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 1ம் கட்டமாக வீடுகள் புணரமைப்பதற்கு தலா 10000 ரூபா காசோலை 06.09.2019 அன்று கரடியனாறு பிரதேசத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது.
- Details
- 632views
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம் வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் 09.09.2019 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
- Details
- 797views
பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பக் கூட்டம்-2019/2020 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கீழ் வரும் அட்டவணையின் பிரகாரம் நடைபெறவிருக்கின்ளறது.இக் கூட்டத்திற்கு அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.





