மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவானது நாளை 03.08.2019 சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கை மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நாடெங்கும் 16,800 வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 277 பட்டதாரிகளுக்கு புதிதாக பயிலுனர் நியமனம் வழங்கப்பட்டது.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையில் ஜனாதிபதி செயலகம் அமுல்படுத்தும் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மறுபயிர் ஊக்குவிப்பு அடிப்படையில் நிலக்கடலை உற்பத்திச்செய்கை மாவட்ட செயலகத்தின் மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் மேற்பார்வையில் 13 பிரதேச செயலகப்பிரிவில் சுமார் 345 ஏக்கரில் மேற்க்கொள்ளப்பட்டது.

மேற்படி நிகழ்வானது எதிர்வரும் 01.08.2019 ம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக ‘‘டேபா’’ மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எனவே நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்ற அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.