மட்டக்களப்பு மாவட்ட "பாம் பவுன்டேசன்" நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வாழ்வாதார உதவி திட்டங்களையும், அனர்த்த அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் 24.10.2019 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் "தொலஸ் மகே பாண" வேலைத்திட்டத்தின் கீழ் பாரம்பரிய உணவுக்கண்காட்சியானது பிரதேச செயலகங்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட செயலக முன்றலில் அமைக்கப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடத்தில் 23.10.2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் பருவகால நிலையினால் ஏற்படுகின்ற அனர்த்தம் சம்பந்தமான முன்னாயத்த ஒழுங்குபடுத்தல் கலந்துரையாடல் கடந்த 24.10.2019 காலை 9.00 மணியளவில் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சுற்றாடலில் ஏற்படும் பாதிப்புக்களை தீர்த்துவைக்கவும் மற்றும் சுற்றாடலை பாதுகாக்கும் முகமாகவும் கலந்துரையாடும் கூட்டம் 22.10.2019 அன்று காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.